
Ramayana: The Legend of Prince Rama விமர்சனம்
“நான் ஷத்திரியனாக இருப்பதை விட மனிதனாக இருக்கவே விரும்புகிறேன்”
- யூகோ சாகோவின் ராமன்.
ஜப்பானிய இயக்குநர் யூகோ சாகோ, 1993 இல் உருவாக்கிய 2டி அனிமேஷன் படத்தை, 4K மாஸ்டெரிங் செய்து தற்போது வெளியிட்டுள்ளனர் கீக் பிக்சர்ஸ். ஒரு ஜப்பானியரின் பார்வையில் ராமாயணத்தைப் பார்ப்பது என்பது மிகவும் சுவாரசியமாக உள்ளது. உதாரணத்திற்கு, அனுமன் கடலின் மீது பறக்கும் போது சிம்ஹிகா எனும் ராட்சசி, அனுமனை விழுங்கி விட்டதாகப் புராணக்கதையில் வரும். அதே போல், சுரஸா எனும் ராட்சசி பறக்கும் சக்தியுள்ள ஊர்வன ஜந்துக்களின் தாய் என அழைக்கப்படுபவரும், அனுமனை வழி மறிப்பார். சிம்ஹிகாவின் வயிற்றுக்குள் புகுந்து வயிற்றைக் கிழித்து வெளியேறும் அனுமன், சுரஸாவின் வாய்க்குள் புகுந்து உடலைச் சின்னதாக்கி சட்டென வெளியில் வந்துவிடுவார். யூகோ சாகோ-வோ, இலங்கைப் பயணத்தில் அனுமன் எதிர்கொள்ளும்ருகத்தை டிராகனாகக் காட்டியுள்ளார். டிராகனைக் க...