Shadow

Tag: Ramesh Vaidhya

ரயில் விமர்சனம்

ரயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எப்பொழுதும் போதையில் இருந்து, தனக்கு வரும் வேலை வாய்ப்புகளை இழக்கும் நாயகன், பஞ்சம் பிழைக்க தன் ஊருக்கு வந்து ஒழுக்கமாக வேலை பார்த்து வரும் வட இந்திய தொழிலாளிகளால் தான் தன்னை போன்றோருக்கு வேலை இல்லை என்று வஞ்சம் வளர்க்கிறான். அந்த வஞ்சத்தினால் விளைந்தது என்ன..? என்பது தான் ரயில் திரைப்படத்தின் கதை. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூரில் குடியும் கூத்துமாக வாழ்ந்து வரும் நாயகன் குங்குமராஜுக்கு வீடுகளுக்கு வயரிங் செய்யும் வேலை. ஆனால் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் தன் நண்பன் ரமேஷ் வைத்யாவுடன் கூட்டணி அமைத்து குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் அவருக்கு வர வேண்டிய வேலைகள் கூட வட இந்திய தொழிலாளர்களுக்குப் போய்விடுகிறது. சற்று வசதிபடைத்த மனைவி வீட்டிலிருந்து வந்த நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனம் முதற்கொண்டு குடித்து அழித்துவிட்ட காரணத்தால் மனைவி வைரமாலாவுடனும் இணக்கமான உறவு இ...