Shadow

Tag: Relax movie

ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

சினிமா, திரைச் செய்தி
ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த 'புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்' என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய டேவி சுரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார். ஹிந்தியில் வெளியான 'திருட்டுப்பயலே 2' படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்தப் படத்திற்கு எடி...