32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

ரிலாக்ஸ் – மூன்று பெண்களால் காதலிக்கப்படும் நாயகன்

Dinesh R சேலம் Published: 13/10/2022 2 நிமிட வாசிப்பு Updated: 16/10/2022 சினிமா
எழுத்து அளவு:

ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்திற்கு ரிலாக்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கவிஞர் வாலி மற்றும் தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியதோடு, ராவுத்தர் பிலிம்ஸ் தயாரித்த ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற படத்தை இயக்கிய தம்பி சையது இப்ராஹிம் என்ற ஸ்ரீ இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகி மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த விஜய் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய டேவி சுரேஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

பாடலாசிரியர் பழனி பாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.

ஹிந்தியில் வெளியான ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்கு எடிட்டிங் செய்த ராம் சதீஷ் இந்தப் படத்திற்கு எடிட்டிங் செய்கிறார்.

பல வெற்றிப்பாடல்களுக்கு நடனம் அமைத்த தினேஷ், இந்தப் படத்திற்கு நான்கு பாடல்களுக்கு பல்வேறு விதமான நடன அமைப்புகளைத் தரவிருக்கிறார்.

பிரபல கலை இயக்குனர் S.S. மூர்த்தி இந்தப் படத்தின் கலை இயக்குனராகப் பணியாற்றுகிறார்.

>> தயாரிப்பு மேற்பார்வை – வேலுமணி
>> மக்கள் தொடர்பு – மணவை புவன்
>> தயாரிப்பு – ட்ரீம் ஸ்டோரி சினிமா கம்பெனி

இயக்குநர்கள் ரமணா, சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய பா. ஆனந்த்குமார் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். அவர், “இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் தனக்காகத் தன்னைச் சார்தவர்களுக்காக ஒவ்வொருத்தரும் ஏதோ ஒரு வகையில் ஓடிக் கொண்டே இருக்கிறோம். இறுதியில் எல்லோரும் எதிர்பார்ப்பது நிம்மதியான ஓய்வு (ரிலாக்ஸ்). அதுதான் இந்தப் படத்தின் கரு.

ஆறு அறிவு படைத்த எல்லா மனிதர்கள் அனைவரும் காமம், காதல் என்ற உணர்வுகளுடன் பிறக்கின்றனர். இக்கதையில் வரும் நாயகன் தன் வாழ்க்கையில் காதலுக்கும், காமத்திற்கும் இடமே இல்லை என்று வாழ்கிறான். ஒரு சூழலில் மூன்று பெண்கள் அவன் மீது காதல் வயப்படுகின்றனர். ஆனால் அவனுக்குப் பெற்றோர்கள் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துவைக்க முடிவு செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் பதற்றமில்லாமல் எப்படி ரிலாக்ஸாக முடிவு செய்கிறான் என்பதை முழு நகைச்சுவை கலந்து குடும்பப்பாங்கான, ஜனரஞ்சக படமாக உருவாக்க உள்ளோம்.

ஸ்ட்ரெஸ், டென்ஷன்களோடு சுற்றித் திரியும் இன்றைய இளைஞர்களுக்கு இந்தப் படம் நிச்சயமாக ரிலாக்ஸாக இருக்கும்.

படப்பிடிப்பு வயநாடு, காசர்கோடு, மூணார் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.