Shadow

Tag: Revgen Film Factory

ரெட் லேபிள் விமர்சனம் | Red Label review

ரெட் லேபிள் விமர்சனம் | Red Label review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துத்து நாயகனாக நடித்துள்ள படம் “ரெட் லேபிள்” ஆகும். பொன்.பார்த்திபன் கதை, வசனம் எழுத K.R.வினோத் இயக்கியுள்ளார். கல்லூரி மாணவர் தேர்தல் பின்னணியில் ஓர் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கோவையில் இருக்கும் ஒரு கல்லூரியில் மாணவர் தலைவர் தேர்தல் நடக்கிறது. அரசியல்வாதியின் மகன் அந்தப் பதவிக்கு போட்டியிடுகிறார். கல்லூரியின் பேராசிரியர்களுக்கே அவரால் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிறது. அவன் மாணவர் தலைவரானால் மொத்த கல்லூரிக்குமே ஆபத்து என நினைக்கும் பேராசிரியர்கள் சிலர், ஒரு மாணவரை நிற்கச் சொல்லி அதற்கான உதவிகளையும் செய்கிறார்கள். அத்துடன் அதே கல்லூரியில் சில ஆண்டுகளுக்கு முன் மாணவர் சங்கத் தலைவராக இருந்த நாயகன் லெனினை உதவிக்கு அழைக்கிறார்கள். கல்லூரிக் காலத்தில் அடிதடி, பஞ்சாசய்த்து என சுற்றி வந்தவர் இப்போது தான் உண்டு, தன் வேலை உண்ட...
“கமிஷன் கமிஷன் கமிஷன்; சினிமாவுல எல்லாத்துக்கும் கமிஷன்” – லெனின் | Red Label

“கமிஷன் கமிஷன் கமிஷன்; சினிமாவுல எல்லாத்துக்கும் கமிஷன்” – லெனின் | Red Label

சினிமா, திரைச் செய்தி
'ரெட் லேபிள்' படத்தை கே .ஆர். வினோத் இயக்க, ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார். சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவில், கைலாஷ் மேனன் இசையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் படம் வெளியாகிறது. இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க, இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி, அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். ஃபிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த 'ரெட் லேபிள்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தயாரிப்பாளரும் கதாநாயகனுமான லெனின், "நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன். சினிமாவிலும் அதைப் பின்பற்ற நினைத்தேன்.சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரையே தேர்வ...