Shadow

Tag: Review

அங்காரகன் விமர்சனம் :

அங்காரகன் விமர்சனம் :

சினிமா, திரை விமர்சனம்
மலை கிராமத்தின் அடர்ந்த காட்டுப் பகுதியில் ஒரு ரெசார்ட் இயங்கி வருகிறது.  அந்த ரெசார்ட்டுக்கு தன் நண்பர்களோடு வந்து தங்கியிருக்கும் ஒரு இளம் பெண் காணாமல் போய்விட்டாள் என்று தேடத் துவங்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது.  அதைத் தொடர்ந்து நடக்கும் விசாரணையில் அங்கு தங்கி இருப்பவர்கள் அனைவரும் விசாரிக்கப்பட, அவர்கள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட, அந்த ரெசார்ட்டில் இன்னொரு பெண்ணும் காணாமல் போயிருப்பது தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து சில அமானுஷ்ய நிகழ்வுகளும் அங்கு நடக்க, முடிவில் என்ன ஆனது, காணாமல் போன பெண்களுக்கு என்ன நடந்தது என்பதே அங்காரகனின் கதை.ரெசார்ட்டில் இரண்டு பெண்களோடு தங்கும் ஒரு இளைஞன்.  இந்த இரண்டு பெண்களில் ஒருத்தி தான் கதையின் ஆரம்பத்தில் காணாமல் போவது.  இவர்கள் சுற்றுலாவிற்கு வந்தவர்கள். ஒரு கணவன் மனைவி ஜோடி, இருவருமே அவர்களுக்குள் இருக்கும் மனஸ்தாபங்களை போக்கி...
நூடுல்ஸ் விமர்சனம் :

நூடுல்ஸ் விமர்சனம் :

சினிமா, திரை விமர்சனம்
ஒரு சாமானியனுக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்குமான ஈகோ மோதல் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதே “நூடுல்ஸ்” திரைப்படத்தின் ஒன்லைன்.‘தில்’ ‘அய்யப்பனும் கோஷியும்’ போன்ற படங்களிலும் இந்த ஒன்லைனரை காண முடியும். படம் துவங்கும் போது ஒரு மலையாளத் திரைப்படத்தை பார்த்துக் கொண்டு இருக்கிறோமோ என்று நினைக்கத் தோன்றியது. அந்த அளவிற்கு யதார்த்தமான ஒரு மேக்கிங்.ஒரு சனிக்கிழமை இரவு நேரத்தில் ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் ஒன்றின் குடியிருப்புவாசிகள் மொட்டை மாடியில் கூடி பாட்டுக்குப் பாட்டு போட்டி வைத்து விளையாடிக் கொண்டிருக்கும் காட்சியுடன் படம் துவங்குகிறது. எல்லா சனிக்கிழமை இரவுகளிலும் இது அவர்களின் வழமை என்பதும் தெரிய வருகிறது. விளையாட்டின் உற்சாகத்தில் சத்தம் சற்று அதிகமாக இருக்கிறது.  இதை தொந்தரவாக நினைத்த யாரோ போலீஸில் புகார் தெரிவிக்க, கீழே அதே தெருவில் ரோந்து சென்று கொண்டிருக்கும் அந்த ...