
காந்தாரா: சாப்டர் 1 – மேக்கிங் வீடியோ | Kantara
'ராஜ குமாரா' , 'கே.ஜி.எஃப்.', 'சலார்', 'காந்தாரா' போன்ற சாதனை படைத்த படங்களுக்குப் பின்னால் உள்ள அனைவராலும் பாராட்டப்பட்ட தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், நேற்று 'காந்தாரா: சேப்டர் 1' படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது மூன்று வருட படக்குழுவின் உழைப்பைப் பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது.
படத்தின் பின்னணியில் உள்ள காவியத்தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை இந்த வீடியோ வழங்குகிறது.படப்பிடிப்பு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது. மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்திருப்பதால், இ...



