Shadow

Tag: RJ விக்னேஷ் காந்த்

களவாணி 2 விமர்சனம்

களவாணி 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருத நிலத்தின் அழகை, 2010 இல் வந்த களவாணி போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. இப்படத்திற்கு, முதல் பாகத்துடன் நேரடி தொடர்பு இல்லை. முக்கிய கதாபாத்திரங்களை அப்படியே எடுத்தாண்டுள்ளனர். அரசனூரில், களவாணி எனப் பெயர் பெற்ற அறிக்கி எனும் அறிவழகனை, மகேஸ்வரி காதலிக்கிறார். காதலிக்காக உள்ளாட்சித் தேர்தலில் வென்று ஊர் பிரஸிடென்ட் ஆகவேண்டுமென முடிவெடுக்கிறார் அறிக்கி. களவாணி எனப் பெயர் பெற்ற அவர் தேர்தலில் எப்படி வென்றார் என்பதைக் கலகலப்பாகச் சொல்லியுள்ளார் சற்குணம். மடந்தையான மகேஸ்வரிக்கும், களவாணி அறிக்குக்கும் ஆன காதல், முதற்பாகத்தில் அற்புதமானதொரு உணர்வைத் தரும். இந்தப் படத்தில் அது மிஸ்ஸிங். நாயகன், நாயகிக்குள்ளான...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யூ-ட்யூபில் பிரான்க் வீடியோ செய்யும் சிவாவிடமும் விக்கியிடமும், ஜிப்பா போட்ட ஒரு பணக்காரர் மூன்று டாஸ்குகளை முடித்தால், அவர்கள் எதிர்பார்க்கும் பணத்தைக் கொடுத்துக் கோடீஸ்வரர் ஆக்குகிறேன் என வாக்கு கொடுக்கிறார். அந்த மூன்று டாஸ்க்கள் என்ன, அதை எப்படி அவர்கள் முடிக்கின்றனரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. 'ப்ளாக் ஷீப்' யூ-ட்யூப் சேனலில் இருந்து சினிமாவிற்கு வந்துள்ள படக்குழு. படத்திலும் அதன் தொடர்ச்சியாக, 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' என்ற யூ-ட்யூப் சேனல் நடத்துபவர்களாக பிரதான கதாபாத்திரம் இருவரையும் வடிவமைத்துள்ளனர். படத்தின் இடைவேளைக்கு முன்பு, ஓர் அமைச்சர் டாஸ்மாக் கடையை மூட உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு காட்சி வரும். அது வரை அமெச்சூர்களின் கன்னி முயற்சியில் வந்து சிக்கிக் கொண்டோம் என எரிச்சலுடன் நெளிய வைக்கிறார்கள். நகைச்சுவை என்ற பெயரில் அவர்கள் அடிக்கும் ஓபியையும், மொக்கையையும் மருந்துக்கு...
மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இளையராஜாவின் அதி தீவிர விசிறியான ஜீவாவிற்கு மெஹந்தியைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களுக்கிடையே நிகழ்த்தும் சர்க்கஸ் விளையாட்டுதான் படத்தின் கதை. ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் பொயட்டிக் டோனைப் படத்திற்கு செட் செய்துள்ளார். கதை பூம்பாறையில் நடக்கிறது. கூடவே பின்னணியில் இளையராஜாவின் இசை. காதலர்கள் ஓடிப் போகக் காரணமான இளையராஜா A1 அக்யூஸ்ட் என்றும், ராஜகீதம் மியூசிக்கல்ஸ் வைத்திருக்கும் ஜீவா A2 என்றும் வசனம் வைத்து, இளையராஜாவின் இசையையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வர முயன்றுள்ளார் இயக்குநர் சரவண ராஜேந்திரன். ஆனால், இளையராஜாவின் இசை கதையோடு இயைந்து ஒரு மாயத்தை நிகழ்த்தத் தவறி விடுகிறது. அரசியல் பேசும் ஒத்தவெடி கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார். ஆனால் நகைச்சுவைக்கோ, அரசியல் நையாண்டிக்கோ பெரிதும் அவர் உதவவில்லை. படத்தின் குறைகளில் ஒன்று, எந...