“ஒட்டுமொத்த தேசமும் என் குடும்பம்” – திருட்டுக்கு வியாக்கியானம் அளிக்கும் நிதின்
முன்னணி நட்சத்திர நடிகர் நிதின், இயக்குநர் வெங்கி குடுமுலா இருவரும் இரண்டாவது முறையாக ஒரு மிகப் பெரும் திரைப்படத்தில் இணைகின்றனர். இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அட்டகாசமான கூட்டணியில் இப்பட அறிவிக்கப்பட்ட கணத்திலேயே, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது. தயாரிப்பு தரப்பு குடியரசு தின நன்னாளில் இப்படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு ராபின்ஹுட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அனைத்து இந்தியர்களையும் தனது சகோதர சகோதரிகளாகக் நினைத்து, அவர்களிடமிருந்து பணத்தைத் திருட அனைத்து உரிமைகளும் தனக்கு இருப்பதாக நினைக்கும் நிதின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும், இந்த ராபின்ஹுட் டைட்டில் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானதாக அமைந்துள்ளது.
“எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படை பணம்தான். யாராவது பணம் என்ன செய்யும் எனக் கேட்டால், குடும்பத்திற்கு இடையே சண்...