Shadow

Tag: RRR movie vimarsanam

RRR விமர்சனம்

RRR விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்? ரத்தம் - ரணம் - ரெளத்திரம் பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே ஆச்சரியப்பட வைக்கிறார். 186 நிமிடங்கள் நீள படம் என்பதெல்லாம், இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறை. ஆனால், ராஜமெளலியின் மேஜிக் ஷோவில் நேரம் போவதே தெரியவில்லை. The StoRy - The FiRe - The WateR என...