Shadow

RRR விமர்சனம்

ஒரு படைப்பாளி, பொழுதுபோக்கை மட்டுமே நோக்கமாய்க் கொண்டு, அதைத் தன் பார்வையாளர்களுக்கு, விஷுவல் அழகினை மேம்படுத்திக் கொடுத்தால்?

ரத்தம் – ரணம் – ரெளத்திரம்

பாகுபலி எனும் அதி பிரம்மாண்டத்திற்குப் பிறகு, ராஜமெளலியின் மற்றொரு பிரம்மாண்டமான படைப்பு. பாகுபலியில் பேரருவியின் அழகு விஷுவலில் திரைக்குள் ஈர்க்கும் ராஜமெளலி, இப்படத்தில், பெருங்கூட்டத்திற்குள் ஒற்றை ஆளாய்ப் பாயும் ராம்சரணின் தீரத்தில் நம்மைத் தூக்கி உள்ளே போட்டுவிடுகிறார். சாத்தியமில்லாத ஒரு காட்சியைச் சாத்தியமாக்கி, அவரது மேஜிக்கிற்குக் கட்டுண்ட வைக்கிறார். படத்தின் முதற்பாதி முழுவதும் ஒவ்வொரு ஃப்ரேமிலுமே ஆச்சரியப்பட வைக்கிறார்.

186 நிமிடங்கள் நீள படம் என்பதெல்லாம், இன்றைய சூழலில் பார்வையாளர்கள் மீது நிகழ்த்தப்படும் மிகப் பெரும் வன்முறை. ஆனால், ராஜமெளலியின் மேஜிக் ஷோவில் நேரம் போவதே தெரியவில்லை.

The StoRy – The FiRe – The WateR

என கதை சொல்லத் தொடங்கும் ராஜமெளலி, அந்த கனெக்‌ஷனைக் க்ளைமேக்ஸ் வரை அழகாகக் கொண்டு வருகிறார். தனது படங்களில், எப்பொழுதும் சிவனுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் என்கிற விமர்சனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளார். ஒரு படி மேலே போய், ராம்சரணை ராமராகவே உலவ விட்டுள்ளார். உடல்பலத்தைப் பிரதானமாய்க் கொண்ட ஜூனியர் என் டி ஆரின் கதாபாத்திரத்திற்கு பீம் எனப் பெயரிட்டு, மகாபாரத ரெஃபரென்ஸையும் தொட்டுள்ளார். வாயுபுத்திரனான பீமன், ஹனுமான் செய்த வேலையை இப்படத்தில் செய்கிறார். அது, ராமனுக்குத் துணை நிற்றல், ராமனைத் தன் தோளில் தாங்குதல். இப்படியாகப் பெயர்களுக்கும், அதைக் கதையோடு பொருத்தி விடுவதிலும் அவர் காட்டும் அக்கறை வியக்க வைக்கிறது. நானி நாயகனாக நடித்த படத்திற்கு ‘நான் ஈ’ எனத் தலைப்பு வைத்திருப்பார்.

Rise.. Roar.. Revolt

மரகதமணியின் இசையில், ராம்சரணும் – என்டிஆரும் நடனமாடும் காட்சியும், அதைப் படமாக்கிய விதமும் அற்புதம். திரையரங்கு விழா கோலம் பூணுகிறது. படம் பார்க்கப் போவது, நேரத்தைக் கழிக்கவும், மகிழ்ச்சியாக இருப்பதற்கும்தானே! சுபமான முடிவு, விஷுவல் மேஜிக் என,

SS Rajmouli – Ram Charan – Jr NT Rama Rao

ஆகியோர் அடங்கிய மூவர் இணை அதைச் செவ்வண்ணே செய்கின்றனர். வசூல் சாதனை கன்ஃபார்ம்!

1 Comment

Comments are closed.