Shadow

Tag: Saamy 2 vimarsanam in Tamil

சாமி² விமர்சனம்

சாமி² விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பதினைந்து ஆண்டுகளுக்குப் பின், சாமி படத்தின் அடுத்த பாகமாக சாமி ஸ்கொயர் வந்துள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு ஜம்ப் எடுத்து ஆறுச்சாமியின் வாரிசு, பெருமாள் பிச்சையின் வாரிசுகளை வேட்டையாடுவதுதான் படத்தின் கதை. ஆறுச்சாமியே வேட்டையாடி இருந்தால் அது சாமி 2 ஆக இருந்திருக்கும். ராம்சாமிக்குள், ஆறுச்சாமியின் ஆவி புகுந்து வேட்டையாடுவதால் படத்திற்கு சாமி ஸ்கொயர் என்ற குறியீட்டுப் பெயர் சாலப் பொருந்தும். சாமி படத்தின் பலம் அதன் வில்லனான கோட்டா ஸ்ரீநிவாச ராவ். அதிகாரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் ஆளுமையான வில்லன். உடற்பல பராக்கிரமத்தை மட்டும் நம்பும் வெற்றுக் கூச்சலில்லாதவர் பெருமாள் பிச்சை. அவருக்கு மாற்றாக 'பிச்சை க்யூப்' என மூன்று வில்லன்களை இறக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இளைய மகன் ராவணப் பிச்சையாக பாபி சிம்ஹா; மூத்த மகன் மகேந்திரப் பிச்சையாக ஓ.ஏ.கே.சுந்தர்; இடையில், தெய்வேந்திர ப...