சகா விமர்சனம்
சகா என்றால் தோழன். பதின் பருவத்து இளம் குற்றவாளிகளின் நட்பை மையமாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர் முருகேஷ்.
சத்யாவும் கதிரும் நண்பர்கள். தெருவில் திரிந்த அவர்களை வளர்க்கும் திருநங்கையைக் கொன்றவனைக் கொன்று சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைபடுகின்றனர். சிறையில் ஏற்படும் பகையும் நட்பும் அவர்களை எங்குக்கொண்டு செல்கிறது என்பது தான் படத்தின் கதை.
ஷபீரின் இசையில், 'யாயும் ஞாயும் யாராகியரோ' என்ற பாடல் மிகப் பிரபலம். இந்தப் படத்திற்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. சரணும், ஆய்ராவும் அந்தப் பாடலில் மிக அழகாக உள்ளனர். ஆனால் அவர்களுக்குள்ளான காதல் நம்பும்படியாக இல்லை. ரெளடிகளிடம் இருந்து தப்பிக்கும் ஆய்ரா, தனது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளாமல், சரண் மீது காதல் வயப்படுகிறார். அதைச் சொல்லவும் செய்யாமல் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அவ ஏற்றிருக்கும் பாத்திரத்தின் பெயர் ஆர...