
பிக் பாஸ் 3: நாள் 72 | மூவர் வருகையால் இனி ஷோ டைம்தான்
நேற்றைய நாள் தொடர்ந்தது. 'ஏற்கெனவே வெற்றியைப் பார்த்தவர்கள் வெல்லக்கூடாதுன்னா எதுக்கு எங்களைக் கூட்டிட்டு வந்தீங்க' எனக் கேட்ட வனிதா, 'இதுக்கு விளக்கம் கொடுத்தா தான் நான் இனிமே விளையாடுவேன்' எனச் சொல்லிவிட்டு மைக்கைக் கழட்டி வைத்துவிட்டார். சேரனும் ஷெரினும் வனிதாவோடு தான் இருந்தனர்.
'வெல்ல தகுதியான ஆள் நான் எனச் சொல்லி என்னையே நாமினேட் செய்யறதை என்னால புரிஞ்சுக்க முடில' என ஷெரினும் சொன்னார். கொதிநிலைலேயே இருந்த வனிதா இறங்கி வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.
பாய்ஸ் அணி வெளியே வந்ததுக்கு அப்புறம் தன்னை நியாயப்படுத்திக் கொண்டிருந்தார் கவின். தர்ஷன் கஷ்டபட்ருக்கான் யாரும் இல்லையென மறுக்கவில்லை. ஆனால் அது ஒரு தகுதி கிடையாது. இதே தர்ஷன் ஒரு தடகள விளையாட்டு வீரராக இருக்காரென வைத்துக் கொள்வோம். அப்பொழுது 100 மீட்டர் ரேஸ் ஓடும் போது, இவர் கஷ்டபட்டிருக்கார் என கிரேஸ் டைம் கொடுப்பாங்களா? இல்ல கூட ஓ...


