பார்க்கிங் விமர்சனம்
மனிதனின் அடிப்படை குணங்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று காமம், மற்றொன்று கோபம். இந்த இரண்டு உணர்ச்சிகள் மட்டும் தான் அடிப்படையான உணர்ச்சிகள். மற்ற உணர்ச்சிகளான காதல், அன்பு, பாசம், நேசம், பொறுமை, விட்டுக்கொடுத்தல், இரக்கம் காட்டுதல் இப்படி எல்லா உணர்வுகளும் நம் கற்பிதங்களால் மனிதனுக்குள் வளர்க்கப்பட்ட விடயங்களே. இது போன்ற உணர்வுகளை நாம் தலைமுறை தலைமுறையாக கற்பித்துக் கற்பித்து, இன்று மனித இனம் இந்த நிலைமைக்கு வந்து நிற்கின்றது. இதிலிருந்து இன்னும் மேம்பட்டு உயர் நிலைக்குச் செல்வதே மனிதனுக்கும் மனிதகுலத்திற்கும் பெருமை. ஆனால் ஒரு சூழலில் அதுவும் குறிப்பாக ஈகோ நம் மனதிற்குள் நுழையும் போது, மற்ற எல்லா உணர்வுகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு நம் மனதிற்குள் இருக்கும் அடிப்படை உணர்வுகளில் ஒன்றான கோபத்திற்கு மட்டும் நாம் தீனி போடத் துவங்கினால் நாம் முற்றிலும் மனிதத்தை இழந்து மிருகமாக மாறிவிடுவோம்....