“தமிழிற்கு எஸ்; தெலுங்கிற்கு நோ” – சமுத்திரக்கனி | அந்தகன்
'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
அவ்விழாவில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, "சசியை பல இடங்களில் நண்பன் பிரஷாந்த் நினைவுப்படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், 'வா' என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், 'நீ என் வாட்ச்சைப் பார்த்தாய் அல்லவா..! அதனால் உனக்குப் பிடித்த வாட்சை வாங்கிக்கொள்' என்றார். அவரிடம் உரிமையாக, 'எனக்கு அந்த வாட்ச் தான் பிடித்திருக்கிறது. அதனால் தான் அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன்' என்றேன். உடனே அவர், 'சரி அதை நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது ஒன்றைப் புதிதாகத் தேர்ந்தெடுத்துக் கொடு'' என்றார். அதேபோல் நண்ப...