சாத்விக் வர்மாவின் ‘சிக்லெட்ஸ்’
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் சாத்விக் வர்மா. அவர் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் 'சிக்லெட்ஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
'திறந்திடு சிசேம்' எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'சிக்லெட்ஸ்'. எஸ். எஸ். பி பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. ஸ்ரீனிவாசன் குரு தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் தெலுங்குத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான சாத்விக் வர்மா மற்றும் 'வலிமை' ஜாக் ராபின்சன் ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நயன் கரிஷ்மா, அமிர்தா ஹைதர், மஞ்சீரா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மேலும் ஸ்ரீமன், மனோபாலா, சம்பத்ராம், சுரேகா வாணி, ஜானகி, மீனாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கொளஞ்சி குமார் ஒளிப...