Shadow

Tag: Sattendru Maarudhu Vaanilai movie

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகியைக் கண்டதும் சட்டெனக் காதல் கொள்ளும் நாயகன், 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' எனக் கேட்டதும், நாயகியும் சட்டெனச் சம்மதம் தெரிவிக்கிறார். டக்கெனத் திருமணம் செய்து பட்டென வாழ்க்கையைத் தொடங்கினால், சட்டென அவர்கள் வாழ்க்கையில் வானிலை மாறி பிரச்சனை தொடங்குகிறது. அவ்வானிலை மாற்றத்தில் இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் முடிவு. மூன் ஸ்டே எனும் பெயரில் பல ஹோட்டல்கள் வைத்துள்ள கருடா ராம், புதுமணத் தம்பதிகளுக்குத் தங்கள் ஹோட்டலில் தங்குவதற்குச் சலுகை தருகிறார். அறைகளில் கேமரா பொருத்தி, தம்பதியின் அந்தரங்கமான தருணங்களை வீடியோவாக்கிப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். சின்ன பகவதி சிண்ட்ரோமில் இருந்து வெளியில் வராத ஜெய்யின் மேனரிசங்களைப் பார்த்துப் பனையூருக்குச் சென்று இளைய தளபதியை எப்படியாவது மீண்டும் நடிக்க அழைத்து வந்துவிட வேண்டுமெனப் படத்தில் கலாய்த்துக் கொண்டே இருக்கிறார் யோகிபாபு. இயக்குநரும...
சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர்

சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
BV ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை” ஆகும். மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சசி, “பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான்தான் சார் தயாரிப்பாளர்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்குக் கொஞ்...