Shadow

Tag: Savarakathi thirai vimarsanam

சவரக்கத்தி விமர்சனம்

சவரக்கத்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முழு நீள பிளாக்-காமெடி படமாகச் சிரிக்க வைக்கிறது சவரக்கத்தி. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார் மிஷ்கினின் தம்பி G.R.ஆதித்யா. முடி திருத்துபவரான பிச்சை தனது குடும்பத்துடன் ராஜ்தூதில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவர்களைப் பரோலில் வந்த மங்கா எனும் கொலையாளியின் கருப்பு ஸ்கார்பியோ லேசாய்த் தட்டி விடுகிறது. பிச்சை தனது குடும்பத்தினர் முன் பந்தாவாக ஸ்கார்பியோவில் வந்தவர்களை வம்புக்கு இழுத்து விடுகிறார். கிறுக்கனான மங்கா, பிச்சையைக் கொன்றே தீர்வதென அவரைத் தேடுகிறார். பிச்சை மங்காவிடம் சிக்கினாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ஒரே நாளில் நிகழும் படம். மிக எளிமையான ஒரு வரிக் கதை. ஒருவன் கொல்லத் துரத்துகிறான்; மற்றொருவன் தப்பிக்கப் பார்க்கிறான். பயந்து ஓடும் பிச்சைக்கு, காது கேளாத கர்ப்பிணி மனைவியும் இரண்டு அழகான குழந்தைகளும் உள்ளனர். பிச்சையாக இயக்குநர் ராம் நடித்துள்ளார். ஒர...