“ப்ரின்ஸ்: எனது முதல் தீபாவளி படம்” – சிவகார்த்திகேயன்
தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 21 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது ‘ப்ரின்ஸ்’ திரைப்படம்.
சென்னையில் நடைபெற்ற பிரின்ஸ் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், ’‘இந்த ‘ப்ரின்ஸ்’ படம் மிகவும் சிம்பிளான கதை. ஒரு இந்திய பையன், பிரிட்டிஷ் பெண்ணைக் காதலிக்கிறான் என்பதுதான் கதை.
ஆனால், இதில் இயக்குநர் அனுதீப் கொடுத்திருக்கும் காமெடிக்கான ட்ரீட்மென்ட்தான் படத்தில் புதிய விஷயம். காமெடி என்றால் கவுன்ட்டர் செய்யாமல் சம்பந்தமேயில்லாத வேறொரு பதில் சொல்வது சில்லியான பதில் சொல்வது என புதிய விஷயம் சொல்லியிருக்கிறோம்.
அனுதீப் தெலுங்கில்தான் சிந்திப்பார். அந்தக் காமெடியைத் தமிழுக்கு மாற்றிக் கொண்டு வர வேண்டும். இரண்டு தரப்பு மக்களுக்கும் பிடிக்க வேண்டும். இதை ஏன் நாம் பரிசோதித்துப் பார்க்க்க் கூடாது என நினைத்தோம்.
...