Shadow

Tag: Shotokonthe Shohosrokontho

ரவீந்திர சங்கீதம் – என்றும் புதுமை | Sur O Lohori

ரவீந்திர சங்கீதம் – என்றும் புதுமை | Sur O Lohori

சமூகம்
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ‘Sur O Lohori (இசையும் தாளகதியும்)’, கலை மற்றும் கலாச்சார நிறுவனம் மூலம் மெல்லிசை இசை அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபது பாடல்களுடன் நூறு குரல்களில் இசைக்கப்பட்ட ரவீந்திர சங்கீதம், சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது. ஒரு பான் இந்தியா நிகழ்வாக, நாட்டின் 11 முக்கிய நகரங்களில் இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த அருந்ததி டெப், மெல்லிசை ட்யூன்களின் கருத்தாக்கத்திற்கும் இசையமைப்பிற்கும் மூளையாக இருந்து இந்நிகழ்ச்சியை இயக்கினார். ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கலாச்சார நிறுவனம் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. Chironutan எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்வு, மே 10 ஆம் தேதி அன்று மாலை, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் RJ ஆடிட்டோரியத்தில், நூறு பாடகர்கள் ஒத்திசைவான குரலில் பாட அற்புதமாக அரங்கேறியது. கூடுதல் சிறப்பம...