சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை – சாமானியன் Vs சாமியார்
இந்தியத் திரையுலகின் மிகப் பெரிய கோர்ட் டிராமாவான "சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை (Sirf Ek Bandaa Kaafi Hai)" திரைப்படத்தை, ஜூன் 7 முதல் உள்ளூர் மொழிகளில் காணலாம்.
இந்தியாவின் முன்னணி OTT தளமான ZEE5, அதன் சமீபத்திய நேரடி-டிஜிட்டல் ஒரிஜினல் படைப்பான ‘சிர்ஃப் ஏக் பண்டா காஃபி ஹை’ படத்தை சமீபத்தில் வெளியிட்டது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், அபூர்வ் சிங் கார்க்கி இயக்கத்தில், கோர்ட் டிரமாவாக உருவாகியுள்ள ‘சிர்ஃப் ஏக் பந்தா காஃபி ஹை’ படத்தில் வழக்கறிஞராக மனோஜ் பாஜ்பாய், P.C. சோலங்கி எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. மேலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று பார்வை எண்ணிக்கையில் சாதனை படைத்தது. ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்காக இப்படத்தை வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடுகிறத...