
ஸ்கை ஸ்கிராப்பர் விமர்சனம்
225 மாடிகளைக் கொண்ட விண்ணைத் தொடும், ‘பேர்ள் (Pearl)’ எனும் கோபுர நகரமொன்றை ஹாங்காங்கில் நிர்மாணிக்கிறார் தொழிலதிபர் சாவ் லாங் ஜி. 3500 அடி உயரமான அந்தக் கோபுரத்தின் 96வது தளத்தில், ராக்கின் குடும்பம் மட்டும் தனியாக வசிக்கிறது. ராக், அந்தக் கோபுரத்தின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் காவலர் பொறுப்பை ஏற்கிறார். சர்வதேசப் பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணி புரியும் கோரெஸ் போத்தா எனும் வில்லன், கோபுரத்திற்குள் புகுந்து, 96வது தளத்தில் தீ வைத்து, கோபுரத்தின் தானியங்கி தீயணைக்கும் பாதுகாப்பு வசதியையும் நிறுத்திவிடுகிறான்.
பிரம்மாண்டமான பேர்ள் நகரத்திற்குள் சிக்கிக் கொள்ளும் தன் குடும்பத்தை ராக் எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
ட்வெயின் ஜான்சன் எனும் ராக்-கோடு, இயக்குநர் ராசன் மார்ஷல் தர்பர் இணையும் இரண்டாவது படமிது. சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் படத்தில், ஸ்டேண்ட்-அப...


