Shadow

Tag: slider

இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

சினிமா, திரைத் துளி
மனதின் மென்னுணர்வுகளை வருடிவிட்ட படங்களான அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற படங்களை மறக்க இயலுமா? அதனாலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய அடுத்த படம் உப்பு கருவாடு. ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'உப்பு கருவாடு' ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகும். இந்தப் படத்தின் கதை ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சியப் பயணத்தைத் தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நமக்குள் நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிய கதை ஆகும்.“லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும்.இந்தக் கதையை நகைச்சுவை கலந்து ...
காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும்

காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும்

தொழில்நுட்பம்
நான் எடுக்கும் சில புகைப்படங்களுக்கு பின்னூட்டமாக 'அழகான புகைப்படம், என்ன கேமரா வைத்துள்ளாய்?' என்று அடிக்கடி வரும் கேள்வியானது, சில வருடங்களாகவே என்னை ஆயாசப்படுத்தினாலும், இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதே சரி என்று ஒதுங்கியும் விடுகிறேன். தற்காலத்தைய ஃபேஸ்புக் யுகத்தில் அத்தகைய கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தாலும், கேள்வி கேட்பவர்கள் அந்த பதில்களை கிரகிப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை -- என் நண்பர்களில் பலர் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது? நன்றாகத் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்து உடனடியாக ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவோர் பலர் அது வெறும் அபிப்பிராயமன்றி ஒரு ரசனைக்குரிய விஷயமும் ஆகும் என்பதை அறிந்திருப்பதில்லை. விலை உயர்ந்த ஒரு கேமராவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வாறாக இருக்கும் என்ற எண்ணமே அவர்களில் சிலரை அத்தகைய ...
இளவரசி ஹன்சிகா!

இளவரசி ஹன்சிகா!

சினிமா, திரைத் துளி
தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களின் மனதைக் கவர்ந்திருந்தாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்றவர் ஹன்சிகா. அவர் பிறக்கப் போகும் 2015 ஆம் ஆண்டை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ஏனெனில் அடுத்த வருடம் தனக்கு மிகவும் பொன்மயமாக அமையும் என்ற அவரது நம்பிக்கையே மகிழ்ச்சித் திளைப்பிற்குக் காரணம். அரண்மனை படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெற்றுத் தந்த விசாலமான இடத்தை, இந்த ஆண்டு டிசம்பரில் வெளிவரவிருக்கும் “மீகாமன்” படம் தக்க வைக்க உதவுமென நம்பிக்கையுடன் இருக்கிறார். ஹாலிவுட படத்துக்கு இணையான அப்படத்தில், ஆர்யாக்கு நிகரான பாத்திரத்தில் நடித்துள்ளதே அவர் மகிழ்ச்சிக்கு காரணம். நடிக ஜெயப்ரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக நடிக்கும் ‘உயிரே.. உயிரே..’ படத்தில், அவரது வயதுக்கும் துள்ளலுக்கும் ஏற்ப பப்லியான பாத்திரத்தில் வருகிறார். 2015 பொங்கல் நாளன்று வெளியா...