
“Slum Dog: சக்திவாய்ந்த விஜய் சேதுபதியைக் காணலாம்” – பூரி ஜெகன் நாத்
பூரி கனெக்ட்ஸ் மற்றும் JB மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்ஷன் திரைப்படம் “ஸ்லம் டாக்” ஆகும். இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் சார்மி கௌர், “2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக வந்துள்ளேன். எங்கள் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ்த் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.
‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்ஷன் காட்சிகளைய...

