Shadow

Tag: Soodhu Kavvum 2 movie

சூது கவ்வும் 2 விமர்சனம்

சூது கவ்வும் 2 விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பொழுது, இந்த நாடும் நாட்டு மக்களும் என்னாவார்கள் என்பதை நகைச்சுவையாகச் சொல்ல முயன்றுள்ளது படம். 'சொதப்பினா ஒத்துக்கணும்' என்ற கடைசி விதிக்கு உட்பட்டு, கடத்தல்காரர்களின் தலைவன் குருநாத் சிறைக்குச் செல்கிறார். அவர் சிறையில் இருந்து வந்ததும், அவருக்கு மட்டுமே தெரியக்கூடிய அம்முவின் மரணத்திற்குக் காரணம் நிதி அமைச்சர் அருமை பிரகாசம் என குருநாத்திற்குத் தெரிய வருகிறது. அருமை பிரகாசத்தைப் பழிவாங்க நினைக்க, அது குருநாத் குழுவை எங்கு இட்டுச் செல்கிறது என்பதுதான் படத்தின் கதை. சூது கவ்வும் முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் மிக அழகாக இணைத்துள்ளனர். வாகை சந்திரசேகரைக் கொண்டு அமைக்கப்பட்ட பின் கதை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியையும், பாபி சிம்ஹ்சவையும் கதைக்குள் கொண்டு வந்த விதமும் ரசிக்க வைக்கிறது. இப்பாகத்தில், இரண்டு நல்ல 'சைக்கோ' காவல்துறை ...
சூது கவ்வும் – 2 | சூரு என்றால் என்ன?

சூது கவ்வும் – 2 | சூரு என்றால் என்ன?

சினிமா, திரைத் துளி
தங்கம் சினிமாஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சி.வி.குமார் தயாரிப்பில் எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ராதாரவி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'சூது கவ்வும் 2' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து மண்டைக்கு சூரு ஏறுதே எனும் உற்சாகமிக்க பாடல் திங்கட்கிழமை மாலை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தும் இசைக் கல்லூரியிலும், லண்டன் டிரினிட்டி கல்லூரியிலும் பயின்ற எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ள இப்பாடலை, பிரபல மலேசிய கலைஞர் கண்ணன் கணபதி, முன்னணி சிங்கப்பூர் கலைஞர் ஸ்டீபன் ஜக்கரியா மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடலைப் பற்றி, "திரைப்படத்தின் பின்னணியில் வரும் பாடலான இதில், இதுவரை திரையுலகில் பயன்படுத்தப்படாத ...