Shadow

Tag: Soorarai Pottru movie

செப்டம்பர் 1 முதல் இந்தி ‘சூரரைப் போற்று’

செப்டம்பர் 1 முதல் இந்தி ‘சூரரைப் போற்று’

சினிமா, திரைத் துளி
தமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்திப் பதிப்பின் வெளியீட்டு தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'சூரரைப் போற்று'. தமிழில் வெளியான இந்தத் திரைப்படம் இந்தியில் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில், இந்தியில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தில் பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் அக்ஷய் குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருடன் நடிகை ராதிகா மதன், பரேஷ் ரவால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இந்திய விமானப் படையில் பணியாற்றிய அதிகாரி கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகி இருக்கும் இந்தத் திரைப்...
சூரரைப் போற்று விமர்சனம்

சூரரைப் போற்று விமர்சனம்

OTT, OTT Movie Review, சினிமா, திரை விமர்சனம்
சூரன் என்றால் அநாயாசமான திறமை படைத்தவன் எனப் பொருள். விமானத்தில் செல்வதென்பதே எட்டாக்கனியாக இருக்கும் ஒருவன், ஏர்லைன்ஸ் ஆரம்பித்துக் காட்டுகிறேன் என்ற கனவு கண்டு, அதை நனவாக்கிய அசாத்திய சாகசம்தான் 'சூரரைப் போற்று' படத்தின் கதை. Simply fly! (தமிழில்: வானமே எல்லை) என்ற சுயசரிதைப் புத்தகத்தைத் தழுவி, ஒரு சுவாரசியமான புனைவாக்கத்தைக் கொடுத்துள்ளார் சுதா கொங்கரா. திரையரங்கில் பார்க்க வேண்டிய படமென்ற ஆவலை ஏற்படுத்தியுள்ளது படம். திரையரங்கில் வெளியிட்டாலும், ரசிகர்கள் செல்லத் தயாராகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம், நேர்த்தியான விஷூவலும், ஜி.வி.பிரகாஷின் அற்புதமான இசையுமே! திரையரங்கில் பார்க்க வேண்டிய கொண்டாட்டத்தைப் படம் கொண்டுள்ளது. நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும், சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும், கொண்டாட்டத்திற்கான மேஜிக்கைச் செய்கிறது 'மண்ணுருண்ட', 'வெய்யோன் சில்லி', 'கா...