Shadow

Tag: Suresh Eav

ஆதி 2 குறும்பட விமர்சனம்

ஆதி 2 குறும்பட விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆதி என்ற குறும்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் அரவிந்த். ஆதி என்பதை ஆதி மனிதன் என்பதற்கான குறியீட்டுச் சொல்லாகக் கொள்ளலாம். Man from Earth என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் பாகத்தில், நாயகன் ஆதி, பல்லாயிரம் வருடமாக இறப்பின்றி வாழ்வதாக நிறுவி இருப்பார்கள். பத்து வருடத்திற்கு ஒருமுறை அடையாளத்தையும் இடத்தையும் மாற்றிக் கொள்ளும் ஆதி, இம்முறை அடையாளத்தை மாற்றிக் கொள்ளாமல் இடத்தை மட்டும் சிங்கப்பூருக்கு மாற்றிக் கொள்கிறார். அவரிடம் பயிலும் மாணவர்கள் ஆதியின் உண்மையான அடையாளத்தைத் தெரிந்து கொள்கின்றனர். அவர்களுக்குள் நடக்கும் சுவாரசியமான உரையாடல்தான் இரண்டாம் பாகத்தின் கதை. வரலாற்று ஆசிரியராக முதல் பாகத்தில் வந்த மொஹிதீனிடமிருந்து படம் தொடங்குகிறது. அவர் ட்யூஷன் எடுக்கும் குழந்தைகளிடம், லெமூரியா என்கிற குமரிக்கண்டம் பற்றி விவாதிக்கிறார். ஆதி, குமரிக்கண்டத்தில் தான் வாழ்ந...