சுட்ட கதை விமர்சனம்
சுட்ட கதை – முழு நீள ஃபேண்டசி தமிழ்ப்படம்.‘பாஸ்மார்க்’கில் (BOSSMARK) குடித்து விட்டு ஒருவரை ‘சுட்டு’க் கொலை செய்து விடுகிறார் கோரமலை கான்ஸ்டபிள் ராம்கி. பின் என்னானது என்பது தான் சுட்ட கதை.கான்ஸ்டபிள் ராம்கியாக பாலாஜி. அவர் அனிச்சைத் திருட்டு (Kleptomania) எனும் உளக்குறையால் பாதிக்கப்பட்டவர். இவரும் வலப்பக்க காது கேளாதவருமான கான்ஸ்டபிள் சங்கிலிராயனும் லட்சியவாதிகள். கோரமலையில் தர்மத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் அந்த உயரிய லட்சியம். சிலந்தி எனும் மலைவாசிப் பெண்ணால் அவர்களின் லட்சியம் கொஞ்சம் சறுக்கினாலும், ஒரு கட்டத்தில் “ஃபிகரை விட தர்மமே முக்கியம்” என சிலந்தியையே தூக்கி எறிகின்றனர். கான்ஸ்டபிள் சங்கிலிராயனாக வெங்கி. இந்த இருவர் தான் படத்தின் கதாநாயகர்கள்.
சிலந்தியாக லக்ஷ்மி பிரியா. அறிமுக நாயகி. கோரமலையின் மலைவாழ் மக்களின் சாமி (அ) வீராங்கனை. இடுப்பில் ஒரு குறுவ...