Shadow

Tag: Suttu Pidikka Utharavu

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளையர்கள் வங்கியைக் கொள்ளையடித்துக் கொண்டு ஓட, அவர்களை விரட்டுகின்றனர் கோவைக் காவல்துறையினர். கொள்ளையர்கள் R.S.புரத்திற்குள் நுழைய, அந்த ஏரியாவிற்குள் யாரும் உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருப்பவர்கள் வெளியே வரமுடியாதளவும் சுற்றி வளைக்கிறது காவல்துறை. காவல்துறையின் பிடியில் குற்றவாளிகள் சிக்கினரா என்பதுதான் படத்தின் கதை. கொள்ளையர்கள் பணத்தைத் திருடும் வங்கி, ஒரு மாலின் (mall) மாடியில் இருக்கிறது. நான்கு பேரில் ஒருவன் கூட, வாகனத்தில் தப்பியோடத் தயார் நிலையில் காத்திருக்காமல் ஏன் அப்படியொரு சொதப்பலான திட்டத்தைத் தீட்டினர் எனத் தெரியவில்லை. காரில் இருவர் தான் ஏறுகின்றனர். போலீஸைத் தவிர்க்க அந்தக் கார், பார்க்கிங்கில் இறங்கியதும், மீதமுள்ள இருவர் அங்கு வந்து ஏறிக் கொள்கின்றனர். இப்படியான காட்சிகள், என்ன ஏது என உள்வாங்கிக் கொள்ளும் முன், தடதடவெனக் காட்சிகள் வேகமாய் ஓடுகிறது. திருடர்கள் ஓடு...
சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

சுட்டு பிடிக்க உத்தரவு – மிஷ்கினும், சுசீந்திரனும்

சினிமா, திரைத் துளி
"ஜூன் 14ஆம் தேதி அன்று, உலகமெங்கும் வெளியாகும் 'சுட்டு பிடிக்க உத்தரவு' படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோருடன் விக்ராந்த் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா, முன்னணி இயக்குநர்களான மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோரை இந்தப் படத்தில் ஏன் நடிக்க வைத்தார் என்று விளக்கினார். "அவர்கள் வெறும் இயக்குநர்கள் என்பதையும் தாண்டி, தமிழ் சினிமாவில் எல்லாவற்றையும் அறிந்த மேதைகள். படப்பிடிப்பில் பல நேரங்களில், அவர்களின் நுணுக்கமான நடிப்பைக் கண்டு வியந்திருக்கிறேன். ஸ்கிரிப்ட்டில் நான் எழுதிய கதாபாத்திரங்களுக்கு அவர்களின் நடிப்பு மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர்கள், அவர்களை இயக்கும்போது தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள்...