Shadow

Tag: Sweet Heart movie first look released by Silambarasan TR and Yuvan

ஸ்வீட் ஹார்ட் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிலம்பரசன் – யுவன்

ஸ்வீட் ஹார்ட் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சிலம்பரசன் – யுவன்

சினிமா, திரைத் துளி
ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளைத் தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி - ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் ...