
ரேம்போ: லாஸ்ட் பிளட் விமர்சனம்
பழி வாங்கும் வெறியில், இறுதி ரத்தத்தைத் தாராளமாகச் சிந்த விட்டுள்ளார் ரேம்போ. அதீத வன்முறைக் காட்சிகள் உள்ளதால், A சான்றிததழ் அளித்துள்ளனர்.
ரேம்போவின் தோழி மரியாவின் பேத்தியான கேப்ரியல், பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் மெக்சிகோ கடத்தல் குழுவினரிடம் சிக்கிக் கொள்கிறார். கேப்ரியலைக் காப்பாற்ற மெக்சிகோ செல்கிறார் ரேம்போ. அந்தக் குழுவிடம் இருந்து கஷ்டப்பட்டு மீட்டு வருகையில், ஓவர்-டோஸாக போதை மருந்து செலுத்தப்பட்டதால் வழியிலேயே கேப்ரியல் இறந்துவிடுகிறார். பழி வாங்கும் வெறியில் சிவக்கும் ரேம்போ, மெக்சிகோ கடத்தல் குழுவை, அரிசோனாவில் இருக்கும் தன் வீட்டிற்கு வர வைத்து, கொலைவெறித் தாக்குதல் தொடுத்து, அக்குழுவை நிர்மூலம் செய்வதுதான் படத்தின் கதை.
சோர்வான, வயோதிக சில்வஸ்டர் ஸ்டலோன். குதிரை சவாரி செய்து காலத்தைக் கழிக்கும் அந்த முதியவரின் ஒரே நம்பிக்கையான கேப்ரியலை இழந்ததும், சீற்றமட...