ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை
ஒரு திரைப்படம் உருவாக மிகவும் முக்கியமான காரணமாக இருப்பவர் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். வெகு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு விழாவிலும், சரியான அங்கீகாரமும் அடையாளமும் கிடைப்பதில்லை. இதனைக் கலையும் பொருட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், FM சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, எந்தவொரு பாடல் ஒலிபரப்புவதற்கு முன்பும், அந்தத் திரைப்படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயரைச் சொல்லித்தான் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. FM நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு கெளரவத்தினையும் மரியாதையையும் ஏற்படுத்தி உள்ளது.
இதே போல், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்குக்ம் விழாக்களில், விருது அறிவிக்கும் போது தயாரிப்பாளரின் பெயரையும், அந்த நிறு...