Shadow

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு JSK சதீஷ்குமாரின் கோரிக்கை

Producer-J-Sathish-Kumar 

ஒரு திரைப்படம் உருவாக மிகவும் முக்கியமான காரணமாக இருப்பவர் அப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். வெகு சிலரைத் தவிர்த்து, பெரும்பாலான தயாரிப்பாளர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியே உள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு விழாவிலும், சரியான அங்கீகாரமும் அடையாளமும் கிடைப்பதில்லை. இதனைக் கலையும் பொருட்டு, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், FM சேனல்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, எந்தவொரு பாடல் ஒலிபரப்புவதற்கு முன்பும், அந்தத் திரைப்படத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளர்களின் பெயரைச் சொல்லித்தான் பாடல்களை ஒலிபரப்ப வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. FM நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இது தயாரிப்பாளர்களுக்கு ஒரு கெளரவத்தினையும் மரியாதையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதே போல், சமீபத்தில் நடைபெற்ற விருது வழங்குக்ம் விழாக்களில், விருது அறிவிக்கும் போது தயாரிப்பாளரின் பெயரையும், அந்த நிறுவனத்தின் பெயரையும் சொல்லி விருது வழங்கவேண்டும் என்றும், திரைப்படம் சம்பந்தப்பட்ட விருது வழங்கினால் அந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளரை நேரில் வரவழைத்து அவரின் கையினாலேயே சம்பந்தப்பட்ட நபருக்கு விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டது. அதனை ஏற்று Provoke இதழ் நிறுவனம் நடத்திய விழாவில் தயாரிப்பாளர் பெயரை அறிவித்துத் தயாரிப்பாளரின் கையினாலேயே விருதையும் வழங்கினார்கள். மேலும், வருகிற 15.08.2019 அன்று நடைபெறவுள்ள Siima விருதுகளும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுள்ளார்கள்.

அவ்வாறே, 10.08.2019 அன்று சென்னை YMCA மைதானத்தில் நடைபெறவிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் மாபெரும் இசை நிகழ்ச்சியிலும், ஒவ்வொரு பாடலும் பாடுவதற்கு முன்பாக, அந்தத் திரைப்படப் பாடல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் மற்றும் தயாரிப்பாளரின் பெயரைக் கூறிப் பாடலைப் பாடவேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளார் தயாரிப்பாளர் JSK.சதீஷ்குமார்.