திரைப்பாடல் வானின் ஒரே நிலா | வைரமுத்து
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வரலாற்றில் வைரமுத்து நிகழ்த்தியிருப்பது யாரும் எட்டியிராத சாதனை. இனியும் யாரும் எட்டமுடியாத சாதனை. வைகறை மேகங்களில் வெளிப்பட்ட சொல்லாட்சி புதுப்புது பிரவாகமெடுத்து பாடல்கள் வழியே இன்று வரையிலும் நின்று ஆட்சி செய்கின்றன.
'இதுவொரு பொன்மாலைப் பொழுது'-இல் அடியெடுத்து வைத்த வைரமுத்துவின் சந்தப்பயணம் எப்படிப் பார்க்கினும் மலைக்கவே வைக்கிறது. சங்க இலக்கியங்களின் உள்ளடக்கங்களைப் பாடல்களில் புகுத்திய வல்லமையை எப்படித்தான் மனிதர் வகுத்தாரோ! ‘ஆயிரம் நிலவே வா’ படத்தில், ‘அந்தரங்கம் யாவுமே’ எனத் துவங்கும் பாடலில், ”பாவை உடலில் கோடி மலரில் ஆடை அணிந்தேன், ஆடை அறியும் சேதி முழுதும் நானும் அறிந்தேன்” என ஒரு குறுங்கவிதையின் குறும்பு அவ்வரிகளில் கொப்பளிக்கும்.
தத்துவப் பாடல்களில் வைரமுத்து கொடி நாட்டவில்லை என்ற விமர்சனத்தை வைரமுத்து காலத்திய சினிமாக்களின் வணிகத்தேவை. மற்றும் ர...