Shadow

Tag: Terminator Dark Fate review in Tamil

டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்

டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தேர்ந்தெடுக்கப்படும் மனிதர்களைக் கொல்ல, எதிர்காலத்தில் இருந்து இயந்திரங்களால் பூமிக்கு அனுப்பப்படும் கொலை இயந்திரங்களே டெர்மினேட்டர்கள். 1984 இல் தொடங்கிய 'டெர்மினேட்டர்' தொடரின் எல்லாப் பாகங்களுக்கும் அநேகமாய் ஒரே கதை தான். என்ன செய்தாலும் அழிக்க முடியாத டெர்மினேட்டர் எனும் அதி நவீன வில்லனுக்கும், என்ன செய்தாவது டெர்மினேட்டர் கொலை செய்ய நினைக்கும் டார்க்கெட்டைக் காப்பாற்ற நினைக்கும் எதிர்கால மனிதர்கள் அனுப்பும் கலப்பு (ஹைப்ரிட்) மனிதனுக்கும் இடையே நடக்கும் துவந்த சண்டையே படத்தின் கதை. 1991 இல் வந்த 'ஜட்ஜ்மென்ட் டே' படம் இன்று பார்த்தாலும் ரசிக்க முடியும். ஆனால், தொடர்ந்து எடுக்கப்படும் தொடர் படங்களில், கதையில் புதிய விஷயங்கள் ஏதும் சேர்க்கப்படாதது, இந்தத் தொடர்ப்படங்களின் மிகப்பெரிய பலவீனம். இப்படமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. ஆனால், இம்முறை ரேவ்-9 எனும் அதிநவீன டெர்மினேட்டரால் இரு உருவ...