Shadow

Tag: Thappu Thanda movie

தப்பு தண்டா ஸ்ரீகண்டன்

தப்பு தண்டா ஸ்ரீகண்டன்

சினிமா, திரைச் செய்தி
பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர் இயக்குநர் ஸ்ரீகண்டன். அந்தப் பட்டறையில் இருந்து வெளிவரும் முதல் இயக்குநர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. "படத்தின் தலைப்பும், டிரைலரும் சற்று திரில்லர் பாணியில் இருந்தாலும், இந்தப் படத்தை எல்லாத் தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் தான் உருவாக்கி இருக்கின்றேன். 'தப்பு தண்டா' ஒரு டார்க் காமெடி படம். படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கும் அஜய் கோஷ் மற்றும் ஜான் விஜய் ஆகியோரின் நடிப்பு நிச்சயமாக அனைவராலும் பாரட்டப்படும். தப்பு தண்டா படத்திற்குப் பிறகு அஜய் கோஷின் வில்லன் அடையாளம் தமிழ்த் திரையுலகில் மேலும் வலு பெறும். இந்த மே மாதத்தில் எல்லோராலும் பேசப்படும் படமாக எங்களின் தப்பு தண்டா இருக்கும். நான் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவன். அவர் இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் அவர் மனைவி அகிலா அம்மா வந்து என்னை வாழ்த்தியது ...