நவம்பர் 30, புத்தி க்ளினிக்கின் 10 ஆண்டு விழாவைச் சிறப்பிக்க, சிறப்புப் பேச்சாளர்கள் திரு. அனுராக் சர்மா, லோக்சபா M.P. மற்றும் இயக்குநர் – Baidhyanath குழுமம்; ப்ரொஃபசர் பர்மீந்தர் சச்தேவ், நியூரோ சைக்காட்ரி இன்ஸ்டிட்யூட், சிட்னி, ஆஸ்திரேலியா; வேணு ஸ்ரீநிவாசன், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலக அரங்கில், இறப்போர் எண்ணிக்கையில் இறப்பிற்கான காரணங்களில், மாரடைப்பிற்கு அடுத்தபடியாக 9 மில்லியனில் அணிவகுத்து நிற்பது நியூரோலாஜிகல் உபாதைகளே! நியூரோலாஜிகல் மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுடனும், அதன் குறைபாட்டுடனும் வாழவேண்டிய ஓர் அவல நிலை பெருகி வருகிறது. அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும்.
புத்தி க்ளினிக், மூளை மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், சீர்நிலையை மீண்டும் கொண்டு வருவதிலும் இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் அரிய பல சாதனைகளை ஆற்றி வந்துள்ளது.
டிசம்பர் 3 ஆம் தேதி 2009-இல் நிறுவப்பட்ட இந்த ஸ்தாபனம் – உடம்பு, மூளை, மனவளம் ஆகிய மூன்று ‘கோள்களை’ 360° கோணத்தில் ஆராய்ந்தறிந்து, பல தரப்பட்ட வயதினருக்கும் திடமான தீர்க்கமானதொரு சிகிச்சை முறையை அமைத்துக் கொடுத்து உபாதைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையையும் செயலாற்றிச் சிறப்பாகச் செயல் புரிந்து வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விஞ்ஞான ரீதியிலான செயல்பாடுகள் அமுலாக்கப்பட்டுள்ளன.
அனுராக் சர்மா, “புத்தி க்ளினிக்கின் பணி சிறப்பானது. உலக நோக்கில் செயல்படும் Made in India வழிமுறை” என்று புகழ்ந்தார்.
வேணு ஸ்ரீநிவாசன், “சேவையின்றி உடல்நலம் பேண இயலாது! (There can be no health care without service). இவர்களது செயல்பாட்டு வாசகம், என்னைப் பரவசத்திலாழ்த்தியது!” என்று சிலாகித்தார்.
இதுநாள் வரை 122 ஆண்டுகள் என்பதுதான் மனிதனின் அதிகபட்ச வாழ்நாட்களாகப் பதிவாகியுள்ளது. 150 ஆண்டுகள் வாழ்வதற்காக வாய்ப்புகளைப் பற்றிக் கலந்துரையாடினார் ப்ரொஃபசர் பர்மீந்தர் சச்தேவ்.
புத்தி க்ளினிக்கின் நிறுவனரான திரு. ப்ரொஃபசர் Dr.E.S.கிருஷ்ணமூர்த்தி, ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சை முறையின் (Integrated Health Care) ஐந்து அடித்தளங்களான,
1. க்ளாஸ்நாஸ்ட் (Glasnost)
2. கொலாபரேஷன் (Collaboration)
3. லீடர்ஷிப் (Leadership)
4. பெரிஸ்ரோகியா (Perestroika)
5. இன்னவேஷன்/ரிசர்ச் (Innovation/Research)
பற்றி விளக்கியதோடு விழா நிறைவடைந்தது.