தி ராஜா சாப் – பிரபாஸின் ரொமான்டிக் ஹாரர் காமெடி
ரிபெல் ஸ்டார் பிரபாஸின் பான்-இந்தியப் படமான 'தி ராஜா சாப்' படத்திலிருந்து, ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாகத் தயாரிப்பாளர்கள் ஓர் அருமையான க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் அசத்தலான வின்டேஜ் லுக்கில் இளமை துள்ளலுடன் ஜொலிக்கிறார் பிரபாஸ்.
'தி ராஜா சாப்' திரைப்படம், ஏப்ரல் 10, 2025 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது எனும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தந்துள்ளனர். வின்டேஜ் காரில் காட்சியளிக்கும் பிரபாஸ், ரொமான்டிக் ஹாரர் காமெடி மூலம் அனைவரையும் வசீகரிக்கத் தயாராக இருக்கிறார். மாருதி, பிரபாஸை ஸ்டைலான தோற்றத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.தற்போது, படத்தின் 40% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் மற்றொரு பிரம்மாண்ட ஷெட்யூல் தொடங்க உள்ளது. இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். ராம் லக்ஷ்மன் மாஸ்டர்ஸ் மற்றும் கிங் சாலம...