Shadow

Tag: The secret life of pets விமர்சனம்

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம்

தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், அதனை வளர்க்கும் உரிமையாளர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் என்ன செய்யும் என்று யோசித்ததுண்டா? அதுதான் இப்படத்தின் கதை. தன்னை வளர்க்கும் கேட்டி மீது மேக்ஸ் எனும் டெர்ரியர் வகை நாய்க்கு மிகுந்த அன்பு. கேட்டி வெளியில் செல்லவே விடாமல் அட்டகாசம் செய்யும் மேக்ஸ். இப்படி நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கையில், ட்யூக் எனும் பெரிய நாயை வீட்டிற்குக் கொண்டு வருகிறாள் கேட்டி. தனக்கும் கேட்டிக்கும் இடையில் ஒன்றை மேக்ஸால் ஏற்றுக் கொள்ளவே முடியலை. ட்யூக்கை எப்படியாவது விரட்டப் பார்க்கிறது. ட்யூக்கிற்கு அது தெரிந்து விடுகிறது. பூங்காவிற்கு வாக்கிங் அழைத்துச் செல்லும்போது, மேக்ஸை பூங்காவை விட்டு வெளியில் அழைத்துச் சென்று விடுகிறது ட்யூக். முதலில், இருவரும் பெரும் பூனைப் படையிடம் சிக்கிக் கொள்கின்றனர்; அடுத்து, ‘அனிமல் கன்ட்ரோல்’ அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறா...