Shadow

Tag: The Sound Story vimarsanam

ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

ஒரு கதை சொல்லட்டுமா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆஸ்கர் விருது வாங்கிய செளண்ட் டிசைனரான ரசூல் பூக்குட்டி நடிகராக அறிமுகமாகும் முதற்படமிது என்பது குறிப்பிட்டத்தக்கது. ரசூல் பூக்குட்டிக்கு, திருச்சூர் பூரம் திருவிழாவின் முழு இசையையும் ஒலிப்பதிவு செய்யவேண்டுமென ஆசை. அது அவருக்கு சாத்தியமானாதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. படம் டாக்குமென்ட்ரி வகைமையைச் சேர்ந்தது. பத்துக்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுக்க, முன்னூறுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்க, ஐந்து லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் இந்தியாவின் மிகப் பெரும் திருவிழா. அவ்விழாவின் இசையை முழுவதுமாக ஒலிப்பதிவு செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. முடியால் மலையைக் கட்டியிழுக்கும் மிகப் பெரிய சமாச்சாரம். 80க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களை ஒருங்கிணைத்து, 'The Sound Story' என்ற பிராஜெக்ட்டை முடிக்கிறார் ரசூல். 'தி செளண்ட் ஸ்டோரி' என்ற தலைப்பிலேயே மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகி...