தி வாக் விமர்சனம்
சில அடி உயரத்தில், இரண்டு கம்பங்களுக்கு இடையே கட்டப்பட்டிருக்கும் கயிற்றின் மேல் நடப்பதை என்னவென்று சொல்வீர்கள்? பொதுவாக, கழைக்கூத்து அல்லது சர்க்கஸ் வித்தை என்போம்.
இல்லவே இல்லை..
‘அது ஒரு கலை’ என்கிறார் பிலிப்.
அந்தக் கலைஞன், தன் 24வது வயதில் செய்த மயிர்க்கூச்செறியும் சாகசம்தான் ‘தி வாக்’ திரைப்படத்தின் கதை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிக அற்புதமான படம்.
இயக்குநர் ராபர்ட் ஜெமெக்கிஸ் மிரட்டியுள்ளார். பிலிப்பாக நடித்துள்ள ஜோசஃப் கோர்டான்-லெவிட்டின் அறிமுகமே அமர்க்களம். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் உச்சியில் நின்று கொண்டு, நியூ யார்க்கிலுள்ள இரட்டைக் கோபுரங்களை ஆர்வம் பொங்கப் பார்த்துக் கொண்டே தன் லட்சியத்தையும் அதை எப்படி அடைந்தேன் என்றும் சொல்ல ஆரம்பிக்கிறார். இரட்டைக் கோபுரங்களை கயிற்றால் இணைத்துவிட்டு, அதில் நடக்க வேண்டுமென்பது அவர் கனவாகி...