Shadow

Tag: Theera Kaadhal thirai vimarsanam

தீராக்காதல் விமர்சனம்

தீராக்காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரிந்த காதல் என்பது ஒருவழிப்பாதை. அதில் திரும்ப முடியாது. அப்படியே முடிந்தாலும், ‘திரும்பக் கூடாது’ என்பதைப் பேசுகிறது தீராக்காதல் திரைப்படம். கொஞ்சம் விட்டுவிட்டு என்றாலும், இன்ப நிழலாடும் வீட்டிற்குள் திடீரென புயல் அடித்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புயலைச் சந்திக்கிறார் நாயகன் ஜெய். மனைவி ஷிவதா, மகள் ஆர்த்தி, நல்ல மரியாதையும் சம்பளமும் உள்ள வேலை என நிறைவான வாழ்வை வாழ்ந்து வருகிறார் ஜெய். அலுவலக வேலையாக ஒருமுறை ரயில் பயணம் மேற்கொள்கிறார். அந்தப் பயணத்தில் தனது முன்னாள் காதலியான ஐஸ்வர்யா ராஜேஷைச் சந்திக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மண வாழ்வுப் பிரச்சனைகளை ஜெய்யிடம் சொல்கிறார். அதன் பிறகு அவர்களின் உறவு எந்த அளவிற்கு வளர்கிறது, அதன் பின் இருவர் வாழ்விலும் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன எனப் பயணிக்கிறது படம். கதாபாத்திரங்களின் உணர்வுகள் வழியாக ரசிகனுக்குக் கதையை உணர்த்த வேண்டிய பொறு...