Shadow

Tag: Thillukku thuttu vimarsanam

தில்லுக்கு துட்டு விமர்சனம்

தில்லுக்கு துட்டு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சேட்டு வீட்டுப் பெண்ணான காஜலைக் காதலிக்கிறான் லோக்கல் பையனான குமார். அது பிடிக்காத காஜலின் தந்தை, ஒரு பங்களாவில் வைத்து குமாரைக் கொல்ல நினைக்கிறார். அந்தப் பங்களாவிலோ இரண்டு பேய்கள் உள்ளன. அங்கு நடக்கும் சுவையான சம்பவங்கள்தான் படத்தின் கதை. கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் தேவலை என நினைக்கும் அளவுக்குச் சலிக்கச் சலிக்க பேய்ப் படத்தை வழங்கி வருகிறது தமிழ்ப் திரையுலகம். ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக சந்தானமும் அந்தக் கோதாவில் குதித்துள்ளார். முருக பக்தன் குமாராக ஆடல் பாடலுடன் அமர்க்களமாய் அறிமுகமாகிறார். குடித்து விட்டு, கருணாசுடன் பேசும் காட்சியில் மட்டும் பழைய சந்தானம் தெரிகிறார். விழுந்து விழுந்து நடனம் புரிவதாகட்டும், மிக ஸ்டைலிஷாகச் சண்டை போடுவதாகட்டும் சந்தானம் புதிய பரிமானத்துக்கு மிகவும் முயன்றுள்ளார். அவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்து விட்டு, இரண்டாம் பாதியில் தான் பேய் பங்களாவுக்குள் நு...