‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ – சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவாக
'முத்துநகர்' என்னும் பெருமையைப் பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தில், வெறும் முத்துக்களும், ஓங்கி உயர்ந்து நிற்கும் பனை மரங்களும் மட்டும் பிரபலம் கிடையாது, கிரிக்கெட் விளையாட்டும் அந்த மாவட்டத்தில் பிரசித்திப் பெற்றது தான். விரைவில் நடக்கவிருக்கும் "தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2016" கிரிக்கெட் போட்டியே அதற்குச் சிறந்த உதாரணமாக விளங்கும்.
'டியூட்டி பேட்ரியாட்ஸ்' எனப் பெயரிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தின் அணியை, சென்னை 'ஆல்பர்ட்' தியேட்டரின் உரிமையாளர் முரளிதரன் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த 'டியூட்டி பேட்ரியாட்ஸ்' அணிக்கு வழிக்காட்டியாக ம்ருகாங் தேசாயும், அணியின் பயிற்சியாளராக முன்னாள் 'ரஞ்சி கோப்பை' விளையாட்டு வீரர் ஜே. ஆர். மதனகோபாலும் பணியாற்றி வருகின்றனர்.
நாடெங்கும் கிரிக்கெட் ஜுரம் ஏறிக் கிடக்கும் சூழல் இது. வீடுகளின் முன்னால், தண்ணீர் இல்லாத குளங்களில், சாலை ஓரங்களில், பள்ளிக்...