Shadow

Tag: Top Star Prashanth about Andhagan movie

“சிம்ரன் உற்ற நண்பி; வனிதா என் சகோதரி” – பிரஷாந்த் | அந்தகன்

“சிம்ரன் உற்ற நண்பி; வனிதா என் சகோதரி” – பிரஷாந்த் | அந்தகன்

சினிமா, திரைச் செய்தி
'டாப் ஸ்டார்' பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அந்தகன்- தி பியானிஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் பேசிய கதையின் நாயகன் பிரஷாந்த் பேசுகையில், '' 'அந்தகன்' அருமையான படைப்பு. இந்தத் திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது. இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன். அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தேர்வு நடைபெறும் போது இயக்குநரின் பட்டியலில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. அதன் பிறகு இயக்குநர் கனி சா...