Shadow

Tag: Uchimalai Kaathavaraayan music video

“உச்சிமலை காத்தவராயன்” – சுயாதீன பாடல்

“உச்சிமலை காத்தவராயன்” – சுயாதீன பாடல்

Songs, காணொளிகள்
இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான 'உச்சிமலை காத்தவராயன்..' எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் 'உச்சிமலை காத்தவராயன்'. இந்தப் பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன் இணைந்து ஆனிவி பாடியிருக்கிறார். ''பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல..” எனத் தொடங்கும் இந்தப் பாடலில் நடிகர்கள் மா.கா.பா. ஆனந்த், ஆர்ஜே விஜய், நடிகை ஆஷ்னா ஜாவேரி ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை டோங்கிலி ஜம்போ இயக்கியிருக்கிறார், இந்தப் பாடலுக்கான நடனத்தை நடன இயக்குநர் சாண்டி அமைக்க, மல்லிகா அர்ஜுன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'உச்சிமலை காத்தவராயன்' எனும் சுயாதீன பாடலை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்த, இந்தக் குழு, வெகுஜன மக்களிடத்தில் ஏகோபித்த ஆதரவுடன் இன்றும் ...