உதயம் விமர்சனம்
மழைப் பொய்த்த மாரிக் காலத்திற்கு பின் வரும் கடும்கோடையின் வறட்சி போல தமிழ்த் திரைப்படங்களில் கதைக்கான வறட்சி நிலவுகிறது.
கதையில் பல ‘மீண்டும்’. பதின்மத்தில் இருக்கும் நாயகி காதல் வயப்படுகிறாள். அவளை, காவலை மீறி நாயகன் தூக்கிச் செல்கிறான். தங்களை துரத்துபவர்களிடம் இருந்து காதலர்கள் தப்பினரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பாளராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வியக்க வைக்கிறார். இது அவரது முதற்படமாக வர வேண்டிய திரைக்கதை என சொல்லப்படுகிறது. பிருத்விராஜ் – சம்யுக்தா கதை எண்ணற்ற முறை சொல்லப்பட்டு விட்டாலும், அதை மற்றொரு முறை சுவாரசியமாக சொல்ல முயன்றுள்ளார். படத்திலிருந்து பார்வையாளனை விலகாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனால் படம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. உதாரணம் நாயகி போலவே நாயகன் “எப்படி”யும் வந்த...