Shadow

Tag: Until Dawn movie vimarsanam in Tamil

UNTIL DAWN விமர்சனம்

UNTIL DAWN விமர்சனம்

அயல் சினிமா, இசை விமர்சனம், சினிமா
‘அன்டில் டான்’ என்பது சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட், 2015 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு வீடியோ கேம் விளையாட்டாகும். இந்த விளையாட்டு ஒரு பட்டாம்பூச்சி விளைவு முறையைப் பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்கள் அவர்கள் எடுக்கும் தேர்வுகளைப் பொறுத்து உயிர்வாழ்வார்கள் அல்லது இறப்பார்கள். இப்படம், அந்த விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ‘லைட்ஸ் அவுட்’, ‘அன்னாபெல் கிரியேஷன்’ போன்ற படங்களைத் தயாரித்த டேவிட் F. சாண்ட்பெர்க் இந்த திகில் படத்தை இயக்கியுள்ளார். க்ளாவரும், அவளது நண்பர்களும் காணாமல் போன தங்கள் தங்கையைத் தேடி ‘தி க்ளோர் வேளி (The Glore Valley)’-க்குச் செல்கிறார்கள். ஓர் அமானுஷ்யமான புயலில் சிக்கிக் கொள்ளும் அவர்கள், தி க்ளோர் வேளியில் ஒரு வீட்டில் தஞ்சமடைகின்றனர். முகமூடி அணிந்த ஒருவனால், க்ளாவரும் அவளது நண்பர்கள் நால்வரும் கொல்லப்படுகின்றனர். கொல்லப்பட்டதும், அனை...