Shadow

Tag: Vallaan movie

வல்லான் விமர்சனம்

வல்லான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கட்டப்பாவ காணோம் படத்தின் இயக்குநர் மணி சேயோனின் இரண்டாவது படமிது. தொழிலதிபர் ஜோயல் கொடூரமான முறையில் கொல்லப்பட, அந்த வழக்கை ஏற்கும்படி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட திவாகரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. திவாகர் ஏன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், காணாமல் போகும் அவரது காதலி ஆத்யாவிற்கும் இந்தக் கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம் என பல முடிச்சுகள் படத்தின் முடிவில் அவிழ்க்கப்படுகிறது. லப்பர் பந்து படத்தில், ஜாலி ஃப்ரெண்ட்ஸ் அணி கேப்டனாக நடித்திருந்த டிஎஸ்கே (TSK), இப்படத்தில் சுந்தர்.சி-க்குக் கீழ் பணிபுரியும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தொழிலதிபர் ஜோயலாகக் கமல் காமராஜ் நடித்துள்ளார். சுந்தர்.சியின் காதலி ஆத்யாவாக தன்யா ஹோப், ஜோயலின் மனைவியாக அபிராமி வெங்கடாசலம், அபிராமி வீட்டில் பணிபுரிபவராக சாந்தினி தமிழரசன் ஆகியோர் நடித்துள்ளனர். ஆனால் இவர்களை விடப் படத்தின் ஓட்டத்திற்கு உ...